பல்சுவை இணைய இதழ்
  


பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 15, 2018, 14:20 [IST]

சென்னை: பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் மயிலாப்பூரில் வசித்து வந்தார். 71 வயதான அவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இந்நிலையில் அவருக்கு நேற்று நள்ளிரவு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடும் மூச்சுத் திணறல் காரணமாக இன்று இயற்கை எய்தினார்.

பாலகுமாரனுக்கு மனைவி கமலா, துணைவி சாந்தா, மகள் கவுரி, மகன் சூர்யா ஆகியோர் உள்ளனர்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமனேரியில் 1946ம் ஆண்டு ஜூலை 5 நாள் பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர், தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனமொன்றில் 1969 ஆம் ஆண்டு சுருக்கெழுத்தராக தனது பணியினைத் துவங்கினார். பின்னர் டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார்.

நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய நாவல்களில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம்.

உடையார், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற பெரிய சரித்திர நாவல்களை எழுதினார். அவரது இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருதுபெற்றார்.

இலக்கியம் போலவே சினிமாவிலும் பல படங்களில் பணியாற்றினார். பாட்ஷா, குணா, ஜென்டில்மேன் உள்ளிட்ட 28 படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ளார். பாக்யராஜ் நடித்த ‘இது நம்ம ஆளு' படத்தை இயக்கினார்.

பிற செய்திகள்
ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு!
ஆந்திராவின் ஆளுநரா? சுஷ்மா சுவராஜ் மறுப்பு
ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம்
மதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை [வீடியோ]
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் [வீடியோ]
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை [வீடியோ]
தமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம் [வீடியோ]
மதுரை தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு
தமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி
திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
அஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு
அஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்
திருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி
விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா
அரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்
புயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து
புதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு
கஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை
இலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
முதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை






எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888



இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

விடுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.10.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)