தமிழ்திரைஉலகம்.காம் - திரைப்படத் தகவல்கள் : தாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943) | தமிழறியும் பெருமாள் (1942)

பல்சுவை இணைய இதழ்
  



4 டி.எம்.சி. தண்ணீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு: சித்தராமையா மறுப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 03, 2018, 15:40 [IST]

புதுதில்லி: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கும் அளவிற்கு போதிய நீர் இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இன்று காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியதும் மத்திய அரசு சார்பில் காவிரி வழக்கில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.

வரைவு திட்டம் தயாராகி விட்டதாகவும், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இருப்பதால் மத்திய அமைச்சரவையின் ஓப்புதல் பெற முடியவில்லை எனவும் தெரிவித்தது.

இதையடுத்து ஏப்ரல் மே மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய 4 டிஎம்சி நீரைத் திறந்து விட கர்நாடகவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் கர்நாடகா உத்தரவை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தது.

ஆனால் கர்நாடகா சார்பில் அரசு 4 டிஎம் சி நீர் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்தால் கர்நாடக தலைமை செயலாளரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் நிலை ஏற்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.

தற்போது செயல் திட்டம் அமலில் இல்லாத நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறப்பது கர்நாடக அரசின் கடமை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வழக்கை வரும் 8 ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தீர்ப்பை அடுத்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா “தமிழகத்துக்கு நீர் திறந்துவிடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை. எங்களுக்கே நீர் இல்லாத போது தமிழகத்திற்கு எங்கே நீரை தரமுடியும். தீர்ப்பு பற்றி கர்நாடக அரசு வழக்கறிஞர் உடன் விவாதிப்பேன்” என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்
விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு கேல் ரத்னா விருது
7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை
ராஜிவ் கொலை வழக்கு: 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு அதிகாரம்
குட்கா ஊழல்: குடோன் உரிமையாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது
ஓரினச்சேர்க்கை குற்றமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கொல்கத்தாவில் பாலம் இடிந்து விபத்து: ஒருவர் பலி, 19 பேர் காயம்
பாஜகவுக்கு எதிராக கோஷம்: கைதான சோபியா ஜாமீனில் விடுதலை
சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் பலி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் பலி
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
மெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை
திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது
லாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை
சென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி
மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு
காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு
காஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா
மதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
செய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர்







எமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக!