அகல்விளக்கு.காம் உறுப்பினராக | ||||||
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக |
ஏப்ரல் 11ல் கருணாநிதியைச் சந்திக்கிறார் மமதா பானர்ஜி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 22:30 [IST] 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மமதா சந்தித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திசேகர ராவை மமதா சந்தித்தார். அதே போல் டெல்லியில் திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழியை மமதா சந்தித்ததார். அப்போது கருணாநிதியை தாம் சந்திக்க விரும்புவதாக கனிமொழியிடம் மமதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 11 அல்லது 12ல் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மமதா பானர்ஜி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதுமையால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருக்கிறார் கருணாநிதி. சமீபத்தில் அவர் தம்மை சந்திக்க குழந்தையிடம் தான் யார் எனச் சைகையில் கேட்கும் வீடியோ டிரண்டானது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திமுக, வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் நீடிக்குமா அல்லது மூன்றாவது அணியில் இணைந்து செயல்படுமா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும். |
|
அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888 |
|
|