அகல்விளக்கு.காம் உறுப்பினராக | ||||||
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக |
செவ்வாழையின் மருத்துவ குணங்கள் வீடியோ உலக மக்களால் அதிகம் சாப்பிடப்படும் பழம் வாழைப்பழம். அதன் ஒரு வகையான செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. பல்வேறு நோய்களிலிருந்து செவ்வாழை நம்மைக் காக்கிறது. செவ்வாழையில் 50 சதவீதம் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் விரைவில் அந்நோயிலிருந்து விடுபடலாம். செவ்வாழையில் அதிகமாக உள்ள பீட்டா-கரோட்டீன், தமனிகள் தடிமனாவதைத் தடுத்து, இதய நோய், புற்று நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் சென்று வைட்டமின் ஏ வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும், சரும ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. மேலும் செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது. இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்க செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உதவுகின்றன. ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும். செவ்வாழையில் உள்ள ஆன்டாசிட் தன்மையினால் நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும். நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் தினசரி இரவு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் விரைவில் இந்த குறைபாடுகள் நீங்கும். பல்வலி, பல்லசைவு போன்ற பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். நாள் முழுதும் புத்துணர்ச்சியாக இருக்க தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள். |
|
அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888 |
|
|