தமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)

பல்சுவை இணைய இதழ்
  

காஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா
மதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்
நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு
தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை
எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்
டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு
ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு
கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி
விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்
பழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்
அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2
இருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு
சினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது
ஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்


ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா?


     ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர். இவரது e=mc2 என்ற தியரி ஆப் ரிலேட்டிவிட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. ஒளி மின் விளைவை கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவரின் சேவைக்காகவும் 1921ல் ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1999ல் டைம் இதழ் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக ஐன்ஸ்டீனை தேர்ந்தெடுத்தது.

     இத்தனை சிறப்புடைய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளைக்கு என்னவானது என்று உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள்.

     ஐன்ஸ்டீன் 1955ம் ஆண்டு தனது 76வது வயதில் வயிற்றில் ஏற்பட்ட நோயினால் மரணமடைந்தார். அப்போது அவர் உடலை பிரேதப் பரிசோதனை செய்த தாமஸ் ஸ்டோல்ட்ஸ் ஹார்வி என்ற நோயியல் மருத்துவர் ஐன்ஸ்டீனின் மூளையை யாருக்கும் தெரியாமல் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார்.

     20ம் நூற்றாண்டின் தலை சிறந்த அறிவாளி ஐன்ஸ்டீன் என்பதால், அவர் இறந்த 7 1/2 மணி நேரத்திலேயே ஹார்வி இந்தச் செயலை செய்துள்ளார்.

     பின்னர் ஹார்வி பிரின்ஸ்டன் மருத்துவமனை ஆய்வகத்தில் ஐன்ஸ்டீனின் மூளையை ஆய்வு செய்தார். அப்போது அவரது மூளை 1230 கிராம் இருந்ததாம்.

     அந்த மூளையைப் பல துண்டுகளாகச் செய்த அவர், ஒரு சில துண்டுகளை தான் வைத்துக்கொண்டு மற்றவற்றை பிற முன்னணி நோயியல் மருத்துவர்களுக்கு கொடுத்துவிட்டார்.

     மூளையை துண்டு செய்வதற்கு முன் அவர் மூளையை பல கோணங்களில் படம் எடுத்துள்ளார். பின்னர் மூளையை 240 பகுதிகளாக பிரித்து பிளாஸ்டிக் போன்ற பொருளான கொலோடியனுக்குள் (Collodion) சேமித்து வைத்தார்.

     ஹார்வி மூளையைப் பிரித்தெடுத்தது போல் ஐன்ஸ்டீனின் கண்களையும் பிரித்தெடுத்து அவற்றை ஹென்றி ஆப்ரம்ஸ் என்ற ஐன்ஸ்டீனின் கண் டாக்டரிடம் கொடுத்து விட்டார்.

     1978ல் ஹார்வியின் வசம் இருந்த ஐன்ஸ்டீனின் மூளை பாகங்கள் ஸ்டீவன் லெவி என்ற பத்திரிகையாளரால் கண்டுபிடிக்கப்பட்டன. அதுவரை ஹார்வியிடம் அவை இருந்தது யாருக்குமே தெரியாது.

     2010ல் ஹார்வியின் சந்ததியினர் மூளை பாகங்களை நேசனல் மியூசியம் ஆப் ஹெல்த் அண்ட் மெடிசினுக்கு கொடுத்துவிட்டனர்.

     அதனுடன் இதுவரை யாரும் பார்க்காத முழு மூளையை எடுக்கப்பட்ட 14 போட்டோக்களையும் அளித்தனர்.

     2013ல் ஐன்ஸ்டீன் மூளையின் 46 சிறு துண்டுகள் பிளடெல்பியாவில் உள்ள முட்டர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவை 20 முதல் 50 மைக்ரான் அளவு கொண்டவை. அந்த ஐன்ஸ்டீனின் மூளையை லென்ஸ் மூலம் பொதுமக்கள் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

     ஐன்ஸ்டீனின் மூளை உண்மையிலேயே மற்றவர்களின் மூளையிலிருந்து வேறுபட்டதா?

     ஐன்ஸ்டீனின் மூளையில் எண், வெளி சார்ந்த செயலாக்க மூளை பகுதிகள் பெரிதாகவும், பேச்சு, மொழி சார்ந்த பகுதிகள் சிறியதாகவும் இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.

     2012 நவம்பர் 16ல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி, சாதாரண மனிதர்களின் மூளையில் மூன்று ரிட்ஜ் எனப்படும் பள்ளங்கள் இருக்கும் நிலையில், ஐன்ஸ்டீனின் மூளையில் நான்கு ரிட்ஜ்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது திட்டங்களை தீட்டுவதற்கும், மூளை பதிவுக்கும் உதவியாக இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     2013 செப்டம்பர் 24ல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, சாதாரண மூளையில் உள்ள இரு செரிபிரல் ஹெமிஸ்பியர்களை இணைக்கும் கார்ப்பஸ் கலோசம் நரம்பு நார்களின் அளவை விட ஐன்ஸ்டீனின் மூளையில் உள்ள கார்ப்பஸ் கலோசம் நரம்பு நார்கள் அதிக அளவில் இருந்தது. இதனால் இருபகுதி மூளையிடையேயும் அதிக கூட்டுறவு சாத்தியமாகி, ஐன்ஸ்டீனின் மூளைத் திறன் அதிகமாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     ஆனால் மற்றொரு சாராரோ மேலே சொல்லப்பட்ட ஆய்வறிக்கைகளை புறந்தள்ளி முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவிக்கின்றனர். ஒவ்வொருவருடைய மூளையும் மற்றவரின் மூளையிலிருந்து வேறுபட்டே இருக்கும். அதைப் போன்றே ஐன்ஸ்டீனின் மூளையும் வேறுபட்டு உள்ளது என்றும், அவர் பிரபலமானவர் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அவர்கள் வாதாடுகின்றனர்.

     எது எப்படியாயினும் ஐன்ஸ்டீனை விட சிறந்த அறிவாளி இன்னும் பிறக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

வீடியோ


எமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக!