AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - பொது அறிவு - அணைகள் - மேட்டூர் அணை
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 519  
புதிய உறுப்பினர்:
B.Sathyanarayanan, Revathy jay
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
செய்திகள்
அலாஸ்கா:கடும் பூகம்பம்-சுனாமி எச்சரிக்கை
மதுரை-தூத்துக்குடி 2வது ரயில்பாதை அடிக்கல்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த பூகம்பம்
ரூ.3,000 கோடி செலவில் 11000 ரயிலில் கேமரா
மபி ஆளுநராக ஆனந்தி பென் பதவியேற்பு
சினிமா செய்திகள்
கயல் சந்திரன் மீது 5 கோடி மோசடி புகார்
இப்போதைக்கு திருமணம் இல்லை:ஸ்ருதி
பத்மாவத் படத்துக்கு தடையில்லை:நீதிமன்றம்
பிரபல பாடகர் சிலோன் மனோகர் மறைவு


மேட்டூர் அணை

வீடியோ     சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணை மேட்டூர் அணை என்று அழைக்கப்படுகிறது.

     இந்த அணையைத் திறந்து வைத்த அன்றைய சென்னை மாகாண கவர்னர் ஜான் பெடரிக் ஸ்டான்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.


     தமிழகத்தின் மிகப்பெரிய அணையான இது 1934ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

     பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பெனி 1801 ஆம் ஆண்டு முதலில் மேட்டூரில் அணைகட்ட முயன்றது; ஆனால் மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியதால் அத்திட்டத்தை கைவிட்டது.

     1835ல் சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரை அணை கட்டுவது குறித்து பேச மைசூருக்கு அனுப்பியது ஆங்கில அரசு. மீண்டும் மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.

     1923ல் திருவாங்கூர் சமஸ்தான திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் அணை குறித்து விளக்கினர். ராமசாமி அய்யரின் மூதாதையர் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர் மைசூர் சமஸ்தான திவான் விஸ்வேஸ்வரய்யாவிடம் இது குறித்து எடுத்துரைத்தார். ஆனால் மைசூர் சமஸ்தானம் மீண்டும் எதிர்த்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு நஷ்ட ஈடாக ஆண்டு தோறும் ரூ.30,00,000/- மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் நோட்டீஸ் கொடுத்தனர். ஆண்டுதோறும் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும், மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்க வைத்தார். அணைகட்ட சம்மதிக்கும் கடிதத்தை தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

     அணை கட்டுவது குறித்த திட்ட ஆய்வு பணி 1905-ல் துவங்கி 1910-வரை நடந்தது. இப்போது உள்ள மேட்டூருக்கு தெற்கே உள்ள செக்கானூர் என்ற இடத்தில் மேற்கே உள்ள பாலமலைக்கும் கிழக்கே உள்ள கோணநாயக்கன்பட்டி அருகில் உள்ள வனவாசி மலைக்கும் இடையே அணை கட்ட ஆங்கிலேய பொறியாளர்கள் முடிவு செய்தனர். இப்போது உள்ளதைக் காட்டிலும் கூடுதலான நீரை சேமிக்க முடிந்தாலும், அதில் ஆபத்து அதிகம் இருப்பதாக கருதி, இறுதியில் அதை கைவிட்டு விட்டு சாம்பள்ளியில் (மேட்டூரில்) அணை கட்ட முடிவு செய்து, 1924-மார்ச் 31-ம் தேதி இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதே ஆண்டு, டிச.11-ம் தேதி அரசு அணை கட்ட அனுமதி வழங்கியது.

     தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு பொறியாளராக “கர்னல்” வில்லியம் மார்க் எல்லீஸ் என்பவரும், நிர்வாக பொறியாளராக வெங்கட்ராமையர், முதன்மை தலைமை பொறியாளராக முல்லிங்க்ஸ் என்பவர்கள் தலைமையில் 24 பொறியாளர்கள் அடங்கிய குழு அணை கட்டும் பணியை தொடங்கியது. 1925 ஜூலை 20-ம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் அணை கட்டும் பணியில் ஈடுபட்டனர். 1934-ம், ஆண்டு ஜூலை 14-ம் தேதி கட்டுமானப் பணி நிறைவு பெற்றது. அணைக் கட்ட ஆன செலவு ரூ.4.80 கோடி.

     மேட்டூர் அணையின் நீளம் 1700 மீட்டர் அதாவது 5,300 அடி . உயரம் 124 அடி. 120 அடி வரை நீரை தேக்கி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. (1 டி.எம்.சி = 100 கோடி கன அடி) 1 டி.எம்.சி. தண்ணீர் குறைந்தால் அணையில் 1.25 அடி தண்ணீர் குறையும். 1 அடி தண்ணீர் குறைந்தால் 0.75 டி.எம்.சி. குறையும்.

     இந்த அணையின் அடித்தளம் கடல் மட்டத்திலிருந்து, 586 அடி உயரத்தில் ஆரம்பிக்கிறது, 791, அடி உயரத்தில் முடிகிறது. மொத்தம் 205 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதில் நாற்பது அடி அகலத்தில், நூற்றைம்பது அடி உயரத்துக்கு இரும்பு தூண்கள் மூலம் இணைக்கப்பட்ட தண்டவாளங்கள் நிறுத்தி அணை கட்டப்பட்டுள்ளது. 171 அடி அகலத்தில் ஆரம்பிக்கும் அணையின் கீழ் தளம், மேலே வர வர குறைந்து கொண்டே வந்து கடைசியில் 12 அடி அகலம் மட்டுமே உள்ளதாக அமைந்துள்ளது.

     அணையின் நீர்பிடிப்பு பரப்பளவு 59.25 சதுர மைல். 2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது. அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

     மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.

     மேட்டூர் அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதன் கிளை நதிகளாக கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை கால்வாய், வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.

     அப்போதைய, சென்னை மாகாண கவர்னர் “ஜான் ஃபெடரிக் ஸ்டான்லி” 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பாசனத்திற்கு நீரை திறந்து வைத்து, அணையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். அணைக்கு அருகில் 34 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டான்லி பூங்காவை கவர்னரின் மனைவி பீட்ரிக்ஸ் ஸ்டான்லி (Lady Beatrix Stanley) திறந்து வைத்தார்.

     அணைக்குள் மூழ்கிப்போன கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு, அணையை ஒட்டிய மலைப்பகுதிகளில் மாற்று நிலத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது. கர்நாடக மாநிலம், செங்கப்பாடி, ஆலாம்பாடி, ஆத்தூர், கவுதள்ளி, மாடால்லி, நல்லூர், தோமையார்பாளையம் போன்ற தமிழர்கள் வசிக்கும் கிராமங்கள் எல்லாமே மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, தண்ணீரில் மூழ்கிய பகுதியிலிருந்து குடிபெயர்ந்து போனவர்கள்தான். சாம்பள்ளி என்ற ஊர்தான் அணைக்குள் மூழ்கியிருக்கும் ஊர்களிலேயே பெரிய ஊராகும். அங்கிருந்த மக்கள் தான் இப்போது உள்ள மேட்டூரில் வந்து குடியேறியவர்கள்.

     அதே போல் கிறித்துவர்கள் அதிகமாக வாழ்ந்த நியாயம்பாடி என்ற ஊரும் நீரில் மூழ்கியுள்ளது. அவ்வூரில் குழந்தை இயேசு தேவாலயம் இருந்துள்ளது. நூறு அடி உயரத்தில் இரட்டை கோபுரங்களுடன் கம்பீரமாக இருந்த இந்த ஆலயத்தின் கோபுரம் அணையில் நீர்மட்டம் குறையும் போது தெரியும்.


     நியாயம்பாடிக்கு பக்கத்தில் இருந்த காவேரிபுரம் என்ற ஊரிலிருந்த ஜலகண்டேஸ்வரர் கோவிலும், அதற்கு முன்பாக உள்ள நாற்பது அடி உயரமுடைய நந்தி சிலையும், இப்போதும் அணையில் நீர்மட்டம் குறையும் போது வெளியே தெரிகிறது.

     காவேரிபுரத்துக்கு வடக்கே கோட்டையூர் என்ற ஊரில், ஒரு கோட்டையும் இருந்துள்ளது. அணையில் மூழ்கிப்போன இந்த கோட்டையின் இரண்டு வாயில் சுவர்கள் மட்டும் இப்போது வெளியே தெரிகிறது.

     காவேரி ஆற்றின் கிழக்கு கரையில் சோழப்பாடி என்ற ஊரில் வீரபத்திரன் கோயில் மிக உயரமானதாக அமைந்திருந்தது. இப்போது, வீரபத்திரன் கோயிலின் மேல் பாதி மட்டும் தெரிகிறது.


     அணை கட்டுமானத்திற்கு தேவையான சுர்கி சுண்ணாம்பு (Surki mortar) சங்ககிரி, பவானி, சேலம் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் கிடைத்த மணல் திருப்தியில்லாததால் பாறைகள் உடைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. கல் புலிமலையிலிருந்து எடுக்கப்பட்டது. வெடி மருந்துகளுக்கு திரவ ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்துக்கு வசதியாக ஜூன் 1926ல் தின்னப்பட்டியிலிருந்து மேட்டூர் வரை டிராம் வசதி ஏற்படுத்தப்பட்டது.

     கடந்த 83 ஆண்டுகளில் இதுவரை மேட்டூர் அணையில் தூர்வாரப்படவில்லை. சுமார் 20 சதவிகித அளவுக்கு தூர்படித்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தூர் காரணமாக மேட்டூர் அணையில் முழுக் கொள்ளளவில் தண்ணீரைச் சேமிக்க முடியவில்லை. இதையடுத்து இவ்வாண்டு அதாவது 2017ஆம் ஆண்டு மே மாதம் 28ம் நாள் மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.

     மேட்டூர் அணையை மூன்று முறை மின்னல் தாக்கியது. இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

     முழுவதும் கல்லால் கட்டப்பட்ட அணைகளில் மேட்டூர் அணைக்கு இணையான அணை எதுவும் இல்லை.
பொது அறிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

நீட் (NEET)


அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்
ஜகம் புகழும் ஜகத்குரு

1861 | 1862 | 1863 | 1864 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1918 | 1919 | 1920 | 1921 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 2017

gowthampathippagam.in
நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

உங்கள் கருத்துக்கள்