|
தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல் 2019 |
தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு நடந்துவருவதால் இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் போட்டியிடலாம் என தமிழக தேர்தல் ஆணையர் சாஹு தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் : மார்ச் 19 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் : மார்ச் 26 வேட்புமனு பரிசீலனை : மார்ச் 27 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் : மார்ச் 29 வாக்குப்பதிவு நாள் : ஏப்ரல் 18 வாக்கு எண்ணிக்கை : மே 23 |
|